கௌரவ படையின் மிகவும் முக்கியமான தூண் மண்ணில் சரிந்தது நேற்று. கர்ணன் மாண்டான். கர்ணன் மாண்ட நிமிடமே போர் தொண்ணூறு சதவிகிதம் முடிந்தது. பிறகு நடந்த போர் வெறும் சடங்குக்காகவே என்பதை துரியோதனன் உணர்ந்தான். தனது பிரியமான 99 தம்பியர்களை இழந்தான். பிதாமகரை இழந்தான், குரு துரோணரை இழந்தான், உயிரினும் மேலான நண்பன் கர்ணனை இழந்தான். மனம் வருந்தினான். செய்வதறியாமல் தவித்தான். மிச்சம் இருந்த சொச்ச வீரர்களை சேர்த்து போருக்கு தயாரானான்.
கௌரவர்கள் பக்கம் மீதம் இருந்தது சில வீரர்களே. இந்நிலையில், துரியோதனன் வேண்டுகோளை ஏற்றுச் சல்லியன் அன்றைய போருக்குத் தளபதி ஆனான். கர்ணன் போர்க்களத்தில் இறந்ததால், தானே போர்க்களம் சென்று கண்ணனையும், அர்ச்சுனனையும் கொல்வதாக துரியோதனிடம் கூறிய உறுதிமொழியை மனதில் கொண்டான். சல்லியனை எதிர்த்து போராட தருமர் முன் வந்தார். இரு திறத்துப் படை வீரர்களும் போர்க்களம் அடைந்தனர். இதுவரை நடந்த போரில் ஏராளமான உயிர்ச் சேதம், பொருட் சேதம் ஏற்பட்டிருந்தது. தவிர யானைப்படை, தேர்ப்படை, காலாட் படை, குதிரைப் படை என்ற நால்வகைப் படைகளின் அழிவும் பேரழிவுதான்.
நகுலன் கர்ணனின் புதல்வர்களில் ஒருவனான விசித்திரசேனனுடன் போரிட்டான். இருவரும் கடுமையாக போரிட்டனர். இறுதியில் விசித்திரசேனன் இறந்தான். கர்ணனின் மற்ற இரு மைந்தர்களும் நகுல சகாதேவர்களிடம் போரிட்டு மாண்டனர். சல்லியனின் புதல்வனை சகாதேவன் கொன்றான். சல்லியனை எதிர்த்து தருமர் போரிட்ட போது, பீமன் தருமருக்கு துணையாக வந்தான். அவனை சல்லியன் தாக்கினான். தருமருக்கும், சல்லியனுக்கும் விற்போர் நீண்ட நேரம் நடந்தது. கடைசியில்..தருமர் சீற்றம் கொண்டு தன் சக்தி ஆயுதத்தை செலுத்த அது சல்லியனின் மார்பில் சரியாக சென்று தாக்கியது. சல்லியனை கொன்றது. கௌரவர்களின் கடைசி தளபதியும் வீழ்தான்.
பின் இந்த குருக்ஷேத்திர போருக்கு காரணமான மஹா பாவி சகுனி போருக்கு வந்தான். அவனைச் சகாதேவன் எதிர்த்து போரிட்டான். சகுனியின் மகன் உலூகனுக்கும் நகுலனுக்கும் போர் நேர்ந்தது. உலூகன் நகுனனால் கொல்லப்பட்டான். அதை அறிந்த சகுனி, பல பாண்டவ வீரர்களை கொன்றான். அணைகின்ற தீபம் பிரகாசமாய் எரிவதை போல் போர் புரிந்தான். தான் இறக்க போவது திண்ணம் என்பது தெரிந்தும் மகிழ்ச்சியோடு போர் செய்தான். பீஷ்மரை அழிக்க வேண்டும் என்ற அவன் சபதமும், அவனின் மொத்த குடும்பத்தின் சபதமும் அவனால் நிறைவேரியதே!!! மகிழ்ச்சி இருக்க தான் செய்யும். ஆனால் சகாதேவனை எதிர்த்து நீண்ட நேரம் அவனால் போரிட முடியவில்லை. அப்போது சகாதேவன் ”அடப்பாவி..உன்னால் அல்லவா இந்தப் பேரழிவு. குல நாசம் புரிந்த கொடியவனே! இது சூதாடும் களம் அல்ல. போர்க்களம். இங்கு உன் வஞ்சம் பலிக்காது “ என்றபடியே சகுனியின் தலையை ஒரு அம்பினால் வீழ்த்தினான். பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் சகாதேவன் செய்த சபதமும் நிறைவேறியது.
எஞ்சி இருப்பது பீமனின் சபதம் மட்டுமே....
துரியோதனன் படைகள் அழிய, தளபதிகள், உடன் பிறந்தோர் என பலரை இழந்தான். போர்க்களத்தை உற்று நோக்கினான். தன்னைத் தவிர யாரும் இல்லை என உணர்ந்தான். ஒரு கதாயுதத்தை எடுத்துக்கொண்டு நடந்தான். தன்னைக் காண வந்த சஞ்சயனிடம் “ நான் ஒரு மடுவில் இருப்பதாகக் கூறிவிடு ” என்று அனுப்பி விட்டு மடுக்களின் நடுவில் அமைந்திருந்த ஒரு நீர் தேக்கத்தில் மறைந்து கொண்டான். அந்த நீர் தேக்கத்தில் ஒரு காற்று குமிழியை உருவாக்கி, தன் மனதை ஒரு நிலை படுத்தவும், சற்று ஓய்வெடுக்கவும், குமிழிக்குள் சென்று நீரில் மறைந்தான். பாண்டவர்கள் துரியோதனனைத் தேடினர். அவன் மடுவில் இருப்பதை சில வேடர்கள் தெரிவித்தனர்.
துரியோதனன் படைகள் அழிய, தளபதிகள், உடன் பிறந்தோர் என பலரை இழந்தான். போர்க்களத்தை உற்று நோக்கினான். தன்னைத் தவிர யாரும் இல்லை என உணர்ந்தான். ஒரு கதாயுதத்தை எடுத்துக்கொண்டு நடந்தான். தன்னைக் காண வந்த சஞ்சயனிடம் “ நான் ஒரு மடுவில் இருப்பதாகக் கூறிவிடு ” என்று அனுப்பி விட்டு மடுக்களின் நடுவில் அமைந்திருந்த ஒரு நீர் தேக்கத்தில் மறைந்து கொண்டான். அந்த நீர் தேக்கத்தில் ஒரு காற்று குமிழியை உருவாக்கி, தன் மனதை ஒரு நிலை படுத்தவும், சற்று ஓய்வெடுக்கவும், குமிழிக்குள் சென்று நீரில் மறைந்தான். பாண்டவர்கள் துரியோதனனைத் தேடினர். அவன் மடுவில் இருப்பதை சில வேடர்கள் தெரிவித்தனர்.
அவன் இருக்குமிடம் வந்த தருமர் “ துரியோதனா!!! சத்ரியனான நீ ? போர்க்களத்தை விட்டு ஒடி வந்து பதுங்கிக் கொண்டாயே ? அதுவா வீரம்? எழுந்து வெளியே வந்து போர் செய் ” என்றார். அதற்கு துரியோதனன் “ தருமரே, நான் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்.நாளை வந்து போர் செய்வேன் அல்லது காட்டிற்குச் சென்று தவம் செய்வேன். எனக்குரிய நாட்டை தருமமாகத் தருகிறேன் .பெற்றுக்கொள்' “ என்றான்.
நடுவே புகுந்த பீமன் “ வீண் பேச்சை நிறுத்து. கதை யுத்தம் செய்வோம் வா “ என்றான். ஒரு சத்ரியனை மற்றொரு சத்ரியன் போரிட சவால் விடுத்தால் அதை மறுப்பது இழுக்கு. வேறுவழியின்றி துரியோதனனும் சம்மதித்தான். இருவரும் குருசேத்திரத்தின் மெற்குப் பகுதியில் உள்ள புனிதமான சமந்த பஞ்சக மடுவின் கரைக்குச் சென்றார்கள். சமமாகவே போரிட்டனர். இரண்டு கதாயுதங்களும் மோதும் போது ஏற்பட்ட ஒலி எட்டு திக்கும் எதிரொலித்தது. போர் முடிவிற்கு வருவதாகத் தெரியவில்லை.
அப்போது கண்னன், யுத்த நெறிக்கு மாறாகப் போர் செய்தால் தான் அவனை வீழ்த்தமுடியும் என்பதை உணர்ந்து, அவன் தொடையைப் பிளக்க வேண்டும் என அர்ச்சுனனிடம் குறிப்பால் தெரிவிக்க, அர்ச்சுனனும் பீமன் பார்க்குமாறு தன் தொடையை தட்டிக்காட்டினான். குறிப்பறிந்த பீமன், தனது கதாயுதத்தால் துரியோதனனின் இரு தொடைகளையும் முறித்தான். நிற்கவும் இயலாது துரியோதனன் கீழே வீழ்ந்தான். ஆத்திரமும், சினமும் கொண்டு “ பீமா இதுவா போர் முறை? இதுவா சத்திரிய தர்மம்? “ என்றான்.
துரியோதனனின் கூற்றைக் கேட்ட பீமன் கூறுகிறான் “ துரியோதனா, நீயா தர்மத்தைப் பற்றி பேசுகிறாய்? அன்று ஒருநாள் எனக்கு விஷம் கொடுத்தாயே அது தர்மமா? கொடிகளால் கட்டி நதியில் வீசினாயே அது தர்மமா? அரக்கு மாளிகையில் எங்களைத் தங்கவைத்து தீயிட்டாயே அது தர்மமா? பாஞ்சாலியை மன்றத்தில் பலர் முன்னிலையில் துகில் உரிந்து மான பங்கம் செய்தாயே அது தர்மமா? எங்கள் குலக்கொழுந்தான அபிமன்யூவை நிராயுதபாணியாக்கி, மூலைக்கு ஒருவராக நின்று கொன்றீர்களே அது தர்மமா? பாவத்தின் மொத்த வடிவமான நீயா தர்மத்தைப் பற்றியும் வீரத்தைப் பற்றியும் பேசுகிறாய்? “ என்றவாறு பீமன் அவனை எட்டிக் காலால் உதைத்து காலை அவன் தலையின் மீது வைத்து அழுத்தினான்.
ஆனால் தருமர் பீமனின் இச் செயலை விரும்பவில்லை “ வீழ்ந்து கிடப்பவன் தலையில் காலை வைத்து அழுத்துதல் தர்மம் அன்று “ என பீமனைக் கண்டித்தார். பீமன் கதாயுத போர் விதியை மீறி துரியோதனனின் தொடையில் அடித்ததை பலராமர் கடுமையாக கண்டித்தார். “ இருவருக்கும் சமமாக தானே வித்தையை கற்று கொடுத்தேன் ? நீ இப்படி செய்தது என்னை அவமானம் செய்ததற்கு சமம்” என்று பீமனை தக்க முற்பட்டார். கிருஷ்ணர் மீண்டும் குறுக்கிட்டு தன் அண்ணனை சமாதானம் செய்தார். பின்னர் பலராமர் அங்கிருந்து கோபத்தில் சென்று விட்டார்.
ஆனால் துரியோதனன் தன் தவறுகளுக்கு வருந்தவில்லை. “உலகெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆண்ட வீரமும், சத்திரிய தர்மத்தின்படி போர்க்களத்தில் போரிட்ட பெருமிதமும் தோன்ற உயிர் துறப்பேன்” என்றான். படுகாயம் அடைந்த துரியோதனன் மரணத்தின் வாயிலில் நிற்கவோ, நடக்கவோ முடியாத சூழ்நிலையில் தரையில் வீழ்ந்து இருந்தான். இதற்கு மேல் அவனை தாக்க வேண்டாம் என்று முடிவெடுத்தனர் பாண்டவர்கள். தானாக இறந்து விடுவான் என்று கருதி அங்கிருந்து நகர்ந்தனர். ஆனால் அவன் உயிர் பிரியவில்லை. பாண்டவர்கள் மீது இருத்த வஞ்சம் அவனை சாக விடாமல் உயிருக்கு உரமாகி கொண்டே இருந்தது.
பின்னர் கண்ணன் அர்ச்சுனனை தேரில் உள்ள கருவிகளை எடுத்துக் கொண்டு தேரில் இருந்து இறங்க சொன்னார். கொடியில் வீற்றிருந்த மஹா பலசாலியான அனுமாரையும் இறங்குமாறு வேண்டினார். அவர்கள் இறங்கியதுமே அர்ஜுனனின் தேர் பற்றியெரிந்தது. சுக்கு நூறாக வெடித்து சிதறியது. அதிர்ச்சி அடைந்த அர்ஜுனன் கண்ணனை பார்த்து இது என்ன விபரீதம் என்று வினவினான். உடன் கண்ணன் “பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோர் செலுத்திய அம்புகளால் முன்னமே தேர் எரிந்திருக்கும். நானும் சிரஞ்சீவி அனுமாரும் அதில் இருந்ததால் அழிவு ஏற்படவில்லை. நான் இறங்கியதும், அம்பு தாக்கிய வெப்பத்தால் தேர் எரிந்து விட்டது” என்றார். பாண்டவர்கள் கண்ணனை வணங்கி நன்றி கூறினர். தர்மத்தை காக்க அவர் நடத்திய நாடகத்தில் அனுமாரின் பங்கு முடிந்தது என்று கூறி அவருக்கு விடை கொடுத்தார். அனுமாரும் கிருஷ்ணரை வணங்கி, பாண்டவர்களுக்கு ஆசி கூறி விடை பெற்றார்.
திருதிராட்டினனுக்கும், காந்தாரிக்கும் கண்ணன் ஆறுதல் கூறினார். “உங்கள் துயரத்திற்கு துரியோதனனே காரணம். அவன் சன்றோர்களின் அறிவுரையை ஏற்கவில்லை. தான் என்னும் ஆணவத்தால் அழிந்தான். அவனால் பாண்டவர்கள் பட்ட கஷ்டத்தை சொல்லி மாளாது. காந்தாரி !!! ஒருமுறை உன் மகன் துரியோதனனிடம் நீ என்ன கூறி ஆசி வழங்கினாய் என்று நினைவு இருக்கிறதா? மகனே, தர்மம் எங்கு உண்டோ அங்கு வெற்றி உண்டு என்றாயே, அஃது அப்படியே நிறைவேறியது. எல்லாம் விதி. எனவே பாண்டவர்களிடம் கோபம் கொள்ள வேண்டாம்.” என்ற கண்ணபிரானின் அறிவுரையைக் கேட்ட காந்தாரி சற்று ஆறுதல் அடைந்தாலும், கிருஷணர் நினைத்திருந்தால் இந்த போரை தடுத்திருக்க முடியும், ஆனாலும் அவனே பார்த்தனுக்கு தேரோட்டியாக இருந்து தன் முழு குலத்தையும் அழித்தது ஏன் என்று எண்ணினாள். கோபம் கொண்டாள். கிருஷ்ணரை நோக்கி “ கண்ணா!!! எங்கள் குலம் எப்படி அழிந்ததோ, அதே போல் உன் யாதவ குலமும் உன் கண் முன்னே அழிந்து போகும். அதை பார்த்த பின் நீயும் அழிந்து போவாய்” என்று சபித்தாள். எல்லாம் அறிந்த கிருஷ்ணர் என்றும் மாறாத தன் இன்முகத்தோடு சாபத்தை ஏற்றார். பின் பாண்டவர்களோடு தங்கள் இருப்பிடம் நோக்கி சென்றார்.
அஸ்வத்தாமனின் கொடிய செயல்.....
தொடைகள் முறிந்ததால் நகர முடியாது துரியோதனன் துயரமுற்றான். தான் அணு அணுவாக செத்து கொண்டிருப்பதை அறிந்தான். அப்போது கிருபர், கிருதவர்மா, அஸ்வத்தாமா ஆகியோர் அவனைக் கண்டு வேதனைப்பட்டனர். அவனுக்கு ஆறுதல் கூறும் வகையில் பொழுது விடிவதற்குள் பாண்டவர்களை கொன்று விட்டு வருவேன் என அஸ்வத்தாமன் கூறினான். சாகும் நிலையில் இருந்தும் துரியோதனன் மனம் மாறவில்லை. அஸ்வத்தாமனுக்கு ஆசி வழங்கி அவனை தளபதி ஆக்கினான். பாண்டவர் பாசறை நோக்கிச் சென்ற மூவரும் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்தனர். அந்த மரத்தில் இருந்த பல காகங்களை ஒரு கோட்டான் கொன்றதை அஸ்வத்தாமன் கவனித்தான். அதுபோல உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும் பாஞ்சாலியையும் கொல்ல வேண்டும் என கருதினான். கிருபர் அத்திட்டத்தை ஏற்கவில்லை.
தொடைகள் முறிந்ததால் நகர முடியாது துரியோதனன் துயரமுற்றான். தான் அணு அணுவாக செத்து கொண்டிருப்பதை அறிந்தான். அப்போது கிருபர், கிருதவர்மா, அஸ்வத்தாமா ஆகியோர் அவனைக் கண்டு வேதனைப்பட்டனர். அவனுக்கு ஆறுதல் கூறும் வகையில் பொழுது விடிவதற்குள் பாண்டவர்களை கொன்று விட்டு வருவேன் என அஸ்வத்தாமன் கூறினான். சாகும் நிலையில் இருந்தும் துரியோதனன் மனம் மாறவில்லை. அஸ்வத்தாமனுக்கு ஆசி வழங்கி அவனை தளபதி ஆக்கினான். பாண்டவர் பாசறை நோக்கிச் சென்ற மூவரும் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்தனர். அந்த மரத்தில் இருந்த பல காகங்களை ஒரு கோட்டான் கொன்றதை அஸ்வத்தாமன் கவனித்தான். அதுபோல உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும் பாஞ்சாலியையும் கொல்ல வேண்டும் என கருதினான். கிருபர் அத்திட்டத்தை ஏற்கவில்லை.
ஆனால் அன்று இரவு அஸ்வத்தாமன் பாண்டவர் பாசறையில் நுழைந்தான். அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர். அவன் திரௌபதியின் புதல்வர்களான உபபாண்டவர்களை, பாண்டவர்கள் என்று எண்ணி தலையை கொய்து கொன்றான். தன் தந்தையை கொன்ற திருஷ்டத்துய்மனை கொன்றான். சிகண்டியையும் கொன்றான். அப்போது பாண்டவர்களும், கண்ணனும் அங்கு இல்லை. அஸ்வத்தாமன் செயல் அறிந்த துரியோதனன் மகிழ்ந்தான். அஸ்வத்தாமன் தான் கொய்த தலைகளை துரியோதனன் வீழ்ந்து கிடந்த இடத்திற்கு கொண்டு சென்று காண்பித்தான். அதை பார்த்த துரியோதனன் “ மூடனே !!!! இவர்களின் இளகிய முகத்தை பார்த்துமா உனக்கு தெரியவில்லை இவர்கள் பாண்டவர்கள் இல்லை என்று? என்ன காரியம் செய்தாய் நீ ? இறுதிவரை பாண்டவர்களை ஒழிக்க முடியவில்லையே” என்று கூறி தன் விழிகளை மூடினான். மூடிய அவன் விழிகள் அதற்கு பின் திறக்கவே இல்லை. அவன் உயிர் பிரிந்தது. வாழ்நாளில் ஒரு கணம் கூட அவன் தன் செயலுக்கு வருந்தவில்லை.
அஸ்வதமானின் செயல் பற்றிய செய்தி அறிந்து பாண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தன் மைந்தர்கள் மாண்டு கிடப்பதை கண்ட பாஞ்சாலி மயங்கினாள். அஸ்வத்தாமனை யாராலும் கொல்ல முடியாது என அவள் அறிவாள். “அவன் தலையில் அணிந்திருக்கும் மணியைக் கவர்ந்து அவனை அவமானப் படுத்த வேண்டும். இல்லையேல் பட்டினி கிடந்து இறப்பேன்'” என சூளுரைத்தாள்.
உடன் பீமன் தேரில் ஏறி கிளம்பினான்....
அவனை எளிதில் பிடிக்க முடியாது என்பதால் கண்ணன் அர்ச்சுனனை அழைத்துக் கொண்டு கிளம்பினார். கங்கை கரையில் முனிவர்களோடு முனிவராக வியாசருடன் இருந்த அஸ்வத்தாமனை கண்டனர். பீமன் அவன் மீது பல அம்புகளை செலுத்தினான். அஸ்வத்தாமன் பிரமாஸ்திரத்தை செலுத்த, அர்ச்சுனனும் பிரமாஸ்திரத்தை செலுத்தினான். இரண்டும் மோதுமாயின் உலகம் அழியும் என அறிந்த வியாசரும், நாரதரும் உலகை காக்க நினைத்தனர். அவர்கள் கட்டளைக்கு பணிந்த அர்ச்சுனன் பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டான்.
அவனை எளிதில் பிடிக்க முடியாது என்பதால் கண்ணன் அர்ச்சுனனை அழைத்துக் கொண்டு கிளம்பினார். கங்கை கரையில் முனிவர்களோடு முனிவராக வியாசருடன் இருந்த அஸ்வத்தாமனை கண்டனர். பீமன் அவன் மீது பல அம்புகளை செலுத்தினான். அஸ்வத்தாமன் பிரமாஸ்திரத்தை செலுத்த, அர்ச்சுனனும் பிரமாஸ்திரத்தை செலுத்தினான். இரண்டும் மோதுமாயின் உலகம் அழியும் என அறிந்த வியாசரும், நாரதரும் உலகை காக்க நினைத்தனர். அவர்கள் கட்டளைக்கு பணிந்த அர்ச்சுனன் பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டான்.
ஆனால் அஸ்வத்தாமனுக்கு திரும்ப அழைத்து கொள்ளும் ஆற்றல் இல்லை. அந்த அஸ்திரம் ஏதேனும் ஒரு இலக்கை அழித்தே தீரும். அஸ்வத்தாமன் பாண்டவர் வம்சத்தையே பூண்டோடு ஒழிக்க எண்ணி பாண்டவர் மனைவியர்களின் கர்ப்பத்தில் இருந்த சிசுக்கள் அனைத்தும் அழியட்டும்; என அந்த அஸ்திரத்திற்கு இலக்கு நிர்ணயித்தான். ஆனால் கண்ணனின் அருளால் உத்திரையின் கரு காப்பாற்றப்பட்டது. சிசுக்களை அழித்த அஸ்வத்தாமனை கண்ணன் பழித்தார். தலையில் இருந்த மணியை வியாசர் தருமாறு கூற அவ்வாறே அளித்தான். “அறிவிலியே!! நீ தொழுநோயால் பீடிக்கப்பட்டு காட்டில் தன்னந்தனியாய் பல ஆயிரம் ஆண்டுகள் விலங்காகவும் மானுடாகவும் தவிப்பாயாக” என்று அஸ்வத்தாமனை சபித்தார் வியாசர்.
உத்தரையின் கருவில் உள்ள குழந்தை நல்லபடியே பிறந்து பரீட்சித் என்னும் பெயருடன் இந்நில உலகை ஆளுவான் என்றும் ஆசி கூறினார். சாபப்படி அஸ்வத்தாமன் காட்டிற்கு சென்றான். பாசறைக்கு திரும்பிய கண்ணனும், பீமனும், அர்ச்சுனனும் திரௌபதியிடம் அஸ்வத்தாமனின் மணியை கொடுத்து ஆறுதல் கூறினர்.
தர்மத்தை ஒரு பக்கமும், அதர்மத்தை மற்றொரு பக்கமும் நிற்க வைத்து, குருக்ஷேதிரத்தை அரங்கேற்றி, இறுதியில் தர்மத்தை நிலைநாட்டினர் பரந்தாமன். மரணித்த ஒவ்வொரு வீரனின் இறப்பிற்கு பின்னும், பலரின் பூர்வ ஜென்ம கதை, சாபங்கள், பாவங்கள், புண்ணியங்கள், சூழ்ச்சி, கடன், என அனைத்தும் பின்னி இருந்தது. ஆயிரம் ஆயிரம் வீரர்களை பலிக்கொண்டு, சடலங்களை மலையாக குவித்து, குருதியை ஆராய் பெருக்கெடுக்க செய்த குருக்ஷேத்திர போர் முடிவிற்கு வந்தது. ரத்த வாடையுடன், மரண ஓலங்கள் உடனும், மாபெரும் இழப்புகளுடனும், கண்நீர்களுடனும் முற்று பெற்றது குருக்ஷேத்திர போர். தர்மத்தை காக்க நடந்த இந்த யுத்தத்தில் அதற்காய் கொடுக்கப்பட்ட விலை அதிகம் தான்.
கௌரவர் தரப்பில் கிருபர், அசுவத்தாமன், கிருதவர்மன், கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினர். பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணர், சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர். போரில் ஈடுபட்ட மற்ற அனைத்து மன்னர்கள், படைத்தலைவர்கள் மற்றும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.
போருக்கு பின், அத்தினாபுரத்தை தலைநகராகக் கொண்ட குரு நாடும், இந்திரப்பிரஸ்தமும் ஒன்றினைக்கப்பட்டது. திருதராட்டிரன் அத்தினாபுரத்தின் மகுடத்தை தருமன் அணிந்து குரு நாட்டின் மன்னரானர். யுயுத்சு, அத்தினாபுரத்திற்கு அடங்கிய இந்திரப்பிரஸ்தம் நாட்டின் மன்னராக நியமிக்கப்பட்டான். துரோணர் வசமிருந்த பாஞ்சால நாட்டின் பாதிப்பகுதியை மீண்டும் பாஞ்சாலர்களுக்கே திருப்பி வழங்கப்பட்டது. அங்க நாடு, சேதி நாடு, காந்தார நாடு, கலிங்க நாடு, ஆந்திர நாடு, கோசல நாடு, மதுரா, மகதம், மத்ஸ்ய நாடு, காஷ்மீரம், பாஞ்சாலம், சிந்து நாடு, திரிகர்த்த நாடு, விராட நாடு மற்றும் இதர நாடுகளின் மன்னர்கள் குருச்சேத்திரப் போரில் வீரமரணம் அடைந்தபடியால், அந்நாடுகளுக்குப் புதிய மன்னர்கள் நியமிக்கப்பட்டனர். கர்ணனின் மகன் விருச்சகேதுவிற்கு, அருச்சுனனின் அரவணைப்பு கிடைத்தது. திருதராட்டிரன், காந்தாரி மற்றும் குந்தி அத்தினாபுரத்தை விட்டு காடுறை வாழ்வு (வானப்பிரஸ்த தர்மம்) மேற்கொண்டனர். தருமன் மற்ற பாண்டவர்களின் துணையுடன் அசுவமேத யாகம் செய்து முடித்தார். அத்தினாபுரத்தை 36 ஆண்டுகள் தருமன் ஆண்ட பின் அருச்சுனன்-சுபத்திரை ஆகியவர்களின் பேரனும், அபிமன்யு- உத்தரையின் மகனுமான பரீட்சித்துவை அத்தினாபுரத்தின் அரசனாக்கினர்.
குருக்ஷேத்திர தொடர் முற்று பெறுகிறது .........
Superb / Great Work / May Almighty Bless You Always
ReplyDelete