போரின் முதல் நாள்.

போர் தொடங்கும் நேரம்..தருமர்..தன் போர்க்கருவிகளைக் கீழே வைத்தார்.போருக்குரிய கவசங்களை நீக்கினார்.எதிரணியிலிருந்த பீஷ்மரை நோக்கிப் போனார்.இதைப் பார்த்தவர்கள் வியந்தனர்.
பீஷ்மர்..முதலியவர்களிடம் ஆசி பெறவே தருமர் செல்வதாக கண்ணன் நினைத்தார்.துரியோதனன் பக்கம் இருந்தவர்கள்..அவர் சரணடைய வருவதாக எண்ணினர்.

இரண்டாம் நாள் போர்

முதலாம் நாள் போரில் உத்தரனும்..சுவேதனும் கொல்லப்பட்டதால்..அதை மனதில் கொண்டு இரண்டாம் நாள் போர் படைகள் திருத்தி அமைக்கப் பட்டன. கிரௌஞ்சப் பறவை வடிவில் படைகளை அமைப்பதால்..அதற்கு கிரௌஞ்ச வியூகம் என்று பெயர். துருபத மன்னன் அதற்குத் தலையாக நின்றான். தருமர் பின் புறத்தில் நின்றார். திருஷ்டத்துய்மனும்,பீமனும் சிறகுகளாக இருந்தனர்.

மூன்றாம் நாள் போர்

இரண்டாம் நாள் போரில் கௌரவர் கை தாழ்ந்திருந்தது. அதனால் மூன்றாம் நாள் போரை மாற்றி அமைக்க பீஷ்மர் விரும்பினார். படைகளை கருட வியூகமாக அமைத்தார். அதன் தலைப்பக்கம் பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமா, சல்லியன், பகதத்தன் ஆகியோர் பொருத்தமான இடத்தில் நின்றனர். துரியோதனன் அவ்வியூகத்தின் பின் புறத்தில் நின்றான். அதை முறியடிக்கும் விதத்தில் பாண்டவர்களின் தளபதியான திருஷ்டத்துய்மன் தன் படைகளை பாதி சக்கர வியூகமாக அமைத்தான். அவன் வலப்பக்கமாக நின்றான். அதன் இரண்டு பக்கங்களிலும் பீமனும், அர்ச்சுனனும் நின்றனர். தர்மர் இடையில் நின்றார். மற்றவர்கள் பொருத்தமான இடங்களில் நிறுத்தப்பட்டனர்.

நான்காம் நாள் போர்

நான்காம் நாள் பீஷ்மர் வியாளம் என்ற வியூகத்தை அமைத்தார். ஐந்து பனைகளை அடையாளமாக உடைய கொடியுடன் போர் புரிந்தார். அனுமானைச் சின்னமாகக் கொண்ட கொடியுடன் ..அவ்வனுமானின் பேராற்றலுடன் போரிட்டான் அர்ஜுனன். அபிமன்யு போர் முனைக்கு வந்தான். அவனைப் பூரிசிரவசு, அஸ்வத்தாமா, சல்லியன் ஆகியோர் எதிர்த்துப் போர் புரிந்தனர்.ஒரு புறம் பீமன் துரியோதனின் தம்பியர் எண்மரைக் (எட்டு பேரை) கொன்றான். தன் கதையால் யானைகளை வீழ்த்தினான். பீமனின் மைந்தன் கடோத்கஜன் வெற்றி மேல் வெற்றி பெற்றான். துரியோதனின் வீரர்கள் சோர்ந்து போயினர்.பலர் மாண்டனர்.

ஐந்தாம் நாள் போர்

பீஷ்மர் மகர வியூகம் வகுத்தார்.வடிவத்தில் இது முதலைப்போல் இருக்கும். திருஷ்டத்துய்மன் சியேன வியூகம் அமைத்தான். இது பருந்து போன்றது. பல ஆயிரம் பேர் மாண்டனர். துரியோதனன் துரோணரைப் பார்த்து ”குருவே நீர் பாண்டவர்களைக் கொல்லும் செயலில் ஈடுபடுங்கள். உம்மையும், பீஷ்மரையுமே நான் நம்பியுள்ளேன்” என்றான்.